பதிவு செய்த நாள்
25
ஜன
2024
07:01
வடலூர்: வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 153வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 153வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக இன்று வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.