மனிதர்கள் காற்றை ஆகாரமாகக் கொண்டு மூச்சு விடுகின்றனர். இறைவனும் மூச்சு விடுகிறான். அவன் பருகும் காற்றையே வேதம் என்கிறோம். வேதத்தை ஸ்ருதி என்று சொல்வர். இதற்கு வெளிப்படுத்தப்பட்ட அறிவு என்று பெயர். அதாவது, வேதங்கள் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை. இதன் மூலத்தை யாராலும் அறிய இயலாது. இவற்றை தொகுத்தவர் தான் வியாசர். பல ரிஷிகள் வேதஞானம் பெற்றுஇருந்தனர்.