Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் ; விடியல் பிறக்கும்.. ... தைப்பூசம்; திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தைப்பூசம்; திருச்செந்தூர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா
எழுத்தின் அளவு:
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

பதிவு செய்த நாள்

25 ஜன
2024
09:01

தஞ்சாவூர், தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில். பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற மலைக்கோயிலாகும் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கடந்த ஜனவரி 16ம் தேதி உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி விசேஷ மலர் அலங்காரத்தில் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, வேலுடன் யானை உருவப்படம் பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாள் தைப்பூச தினமான இன்று  அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது. நிறைவாக நாளை வெள்ளிக்கிழமை இரவு யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்கான தைப்பூசத்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar