Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநியில் தைப்பூச விழா; ... சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் ; விடியல் பிறக்கும்.. பிறப்பு முதல் இறப்பு வரை துணை நீ முருகா..!
எழுத்தின் அளவு:
தைப்பூசம் ; விடியல் பிறக்கும்.. பிறப்பு முதல் இறப்பு வரை துணை நீ முருகா..!

பதிவு செய்த நாள்

25 ஜன
2024
08:01

தைப்பூச நாளில் தான் உலகம் படைக்கப்பட்டது. பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்நாளில் தோன்றின. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மலைக்கோயில்களில் வழிபாடு நடக்கிறது. சக்தியும், சிவனும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதும் தைப்பூசத்தன்று தான். சூரசம்ஹாரத்தின் போது பார்வதி தன் சக்தியெல்லாம் திரட்டி முருகப்பெருமானுக்கு வேல் வழங்கியதும் இந்நாளில்தான். பூசநட்சத்திரத்தன்று வள்ளியை திருத்தணியில் திருமணம் செய்தார் முருகன்.

அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி. குழந்தைக்கு தாய்ப்பால் உணவு. முதுமைக்கு பசுவின் பால் உணவு. இறக்கும் முன் உயிர் துடிக்கும் போதும் பால் ஊற்றுவர். மறைந்த பின் இரண்டாம் நாளன்றும் பாலுாற்றுவர். பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா! என வணங்குவதே பால்காவடி. துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.

கடலுக்குள் கந்தன்; திருச்செந்துார் முருகன் உற்ஸவர் சிலையைக் டச்சுக்காரர்கள் கடத்திச் சென்றனர். வழியில் புயல் வீசவே சிலையை கடலுக்குள் வீசினர். ஐந்தாண்டாக சிலை இல்லாமல் கோயிலில் வழிபாடு நடக்கவில்லை. அதனால் பக்தரான வடமலையப்ப பிள்ளை புதிய சிலை வைக்க முடிவு செய்தார். அப்போது அவரது கனவில் கடலுக்குள் சிலை இருப்பதை முருகன் உணர்த்தினார். கடலுக்குள் தேடிய போது ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதக்கக் கண்டார். அங்கிருந்து சிலையை மீ்ட்டார். மீண்டும் கோயிலில் உற்ஸவர் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியது.

செந்துாரான் அருளால்...; பதினேழாம் நுாற்றாண்டில் அவதரித்தவர் குமரகுருபரர். முருகனருள் பெற்ற இவர், தன் குருநாதரான ஞானதேசிகரின் கட்டளைப்படி காசியில் ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டார். விஸ்வநாதரின் மீது காசிக்கலம்பகமும், சரஸ்வதியின் மீது சகல கலாவல்லி மாலையும் பாடினார். இப்பகுதியை ஆண்ட முகமதிய மன்னர் ஒருவரை மடம் கட்டுவதற்காக பார்க்கச் சென்றார். அப்போது அவருக்கு ஆசனம் தரவில்லை. கோபமுற்ற குமரகுருபரர், காளியின் அருளால் சிங்கத்தை வரவழைத்து அதன் மீது அமர்ந்தார். ஆச்சரியப்பட்ட மன்னர் மடம் கட்ட இடம் கொடுத்தார். காசியில் இவர் நிறுவிய குமாரசுவாமி மடமும், கேதாரேஸ்வரர் கோயிலும் முக்கியமானவை.

தீர்த்தம் செல்லும் பாதை; கொடைக்கானல் மலை, வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது பழநி. மலைக்குச் செல்ல 697 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டு பாதை, யானைப்பாதை, விஞ்ச், ரோப்கார் மூலம் மலைக்கு செல்லலாம். கருப்பசாமி சன்னதியில் வழிபட்ட பின், யானைப்பாதை வழியே மலையேற வேண்டும். மலையின் பின்புறம் திருமஞ்சனப்பாதை உள்ளது. திருமஞ்சனம் என்றால் அபிஷேகம். சுவாமியின் அபிேஷகத்திற்கு எடுத்து வரப்படும் கொடுமுடி தீர்த்தத்தை இதில் கொண்டு செல்வதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar