Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஸ்வரன் கோயிலை புனரமைக்க அனைத்து ... திருவண்ணாமலையில் ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு திருவண்ணாமலையில் ஆதியோகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் காணாமல் போன பக்தர் கொல்லத்தில் மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் காணாமல் போன பக்தர் கொல்லத்தில் மீட்பு

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
04:01

திருவனந்தபுரம்; சபரிமலை மகர விளக்கு காலத்தில் கடந்த 12ம் தேதி காணாமல் போன சென்னை பக்தர் கொல்லம் ரயில் நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

சென்னை சிற்றிலபாக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி 58. கடந்த 10-ம் தேதி இவர் 72 பேர் அடங்கிய குழுவினருடன் சபரிமலையில் தரிசனத்திற்காக சென்றார். தரிசனத்தை முடித்து அனைவரும் 12-ல் சபரிமலையில் இருந்து திரும்ப புறப்பட்டபோது நிலக்கலில் கருணாநிதி மாயமானார்.உடன் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் இவருக்கு லேசான ஞாபக மறதி இருந்ததாகவும் கூறி பம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஊருக்கு திரும்பினர் . இந்நிலையில் கடந்த 20 -ம் தேதி ஒருவர் கொல்லம் ரயில் நிலையத்தில் மயங்கி நிலையில் மீட்கப்பட்டு கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் மாயமானார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலையத்தில் கையில் காயங்களுடன் அந்த நபர் மயங்கி கிடந்ததை கண்ட ஆட்டோ டிரைவர்கள் அவரை மீட்டு மீண்டும் கொல்லம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இவர் சபரிமலையில் காணாமல் போன கருணாநிதி என்பதை உறுதி செய்தனர்.உடல் நலம் சரியானதை தொடர்ந்து ரான்னி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட கருணாநிதியை உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar