Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ... சபரிமலையில் காணாமல் போன பக்தர் கொல்லத்தில் மீட்பு சபரிமலையில் காணாமல் போன பக்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஸ்வரன் கோயிலை புனரமைக்க அனைத்து சமுதாயத்தினர் கூட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஈஸ்வரன் கோயிலை புனரமைக்க அனைத்து சமுதாயத்தினர் கூட்டம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
04:01

கூடலுார்; கூடலுார் ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க அனைத்து சமுதாயத்தினரின் ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.

கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17ம் நூற்றாண்டைச் சேர்த்த வரலாற்று சிறப்புமிக்க ஈஸ்வரன் கோயில் உள்ளது. தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கோயில் முன் மண்டபம், கோபுர பகுதி சேதமடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு வாரமும் பக்தர்கள் வார வழிபாட்டுக் குழு சார்பில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். கோயிலை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் கோயிலை சீரமைப்பது தொடர்பாக வார வழிபாட்டு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட சமுதாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிரசன்னம் பார்த்ததன் அடிப்படையில் சேதமடைந்த கோயிலை சீரமைப்பது, இதன் வடக்குப் பக்கம் புதிதாக கோயில் கட்டுமான பணியை துவக்குவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும், வார வழிபாட்டு குழுவினரும் இணைந்து கோயில் கட்ட வேண்டும், அதற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கோயிலை திருக்கோயில் பட்டியலில் சேர்த்து கட்டுமான பணிகளுக்கான நிதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என முன் வைக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar