மும்பையில் இருந்து நடந்தே அயோத்தி வந்த முஸ்லீம் பெண்; நான் இந்தியாவில் வசிக்கிறேன் என பெருமிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2024 12:01
அயோத்தி: மும்பையில் இருந்து நடந்தே அயோத்தி வந்தார் முஸ்லீம் பெண் ஷப்னம் ஷேக். அயோத்தியை அடைந்த பிறகு, அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து ஷப்னம் ஷேக் கூறுகையில்; இந்த பயணம் எனக்கு சவாலாக இல்லை. நான் வேறு எந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் இது மிகவும் சவாலாக இருந்திருக்கும், ஆனால் நான் இந்தியாவில் வசிக்கிறேன். மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து அயோத்தி வந்துள்ளேன். மூன்று மாநிலங்களின் காவல்துறையும், அரசாங்கமும் எனக்கு உதவி மற்றும் ஆதரவளித்துள்ளன என்று மும்பையில் இருந்து அயோத்திக்கு நடந்தே சென்ற ஷப்னம் ஷேக் தெரிவித்தார்.