பதிவு செய்த நாள்
31
ஜன
2024
01:01
திருப்பதி; திருமலை ஆஸ்தானமண்டபத்தில், பக்தர்களிடையே ஆன்மிக உணர்வை ஏற்படுத்தவும், மத பாகுபாடுகளைத் தடுக்கும் வகையில், பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை சமய மாநாடு நடத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று காலை சமய மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து தேவஸ்தான தலைவர் கூறியதாவது; இந்து தர்மபிரசார பரிஷத்தின் ஏற்பாட்டில், இந்து சமயத்தின் பெருமையை தெரிவிக்கவும், மத பாகுபாடுகளைத் தடுக்கவும், சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் மனிதநேயத்தை வளர்க்கவும் பல நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக சமய மாநாடு நடத்தப்பட்டு, பீடாதிபதிகள், மடாதிபதிகளின் அறிவுரைகள் பெறப்பட உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள இதுவரை 57 பீடாதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சதா பார்கவி, சண்முக் குமார், SV வேதா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சார்யா ராணி சதாசிவமூர்த்தி, நாகேஸ்வர ராவ், ஜெகதீஸ்வர் டாக்டர் T. ரவி, சுகாதார அதிகாரி. டாக்டர் ஸ்ரீதேவி, அஸ்வினி மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் குசுமா குமாரி, திட்ட அலுவலர் ராஜகோபால், ஹெச்டிபிபி செயலர் சோமையாசுலு, தாச சாகித்ய திட்ட சிறப்பு அலுவலர் ஆனந்ததீர்த்தாச்சாரியு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஸ்ரீநிவாசுலு, வி.ஜி.ஓ. நந்தகிஷோர் தடிதா ஆகியோர் உடனிருந்தனர்.