மனிதனின் ஆயுளுக்கும், தொழிலுக்கும் காரணமாக இருப்பவர் சனீஸ்வரர். நேர்மை தவறாமல் கடமையில் கண்ணாக இருப்பவர்களை அவர் ஒன்றும் செய்வதில்லை. சங்கடம் மட்டுமல்ல சந்தோஷம் கொடுப்பதிலும் சனீஸ்வரருக்கு இணையானவர் வேறு யாருமில்லை. பரமேஸ்வரனாகிய சிவபெருமானின் அருள் பெற்று ஈஸ்வரன் என்ற பட்டத்தைப் பெற்றவர். சனிக்கிழமையன்று நவக்கிரக சன்னதியில் எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது விதவைகளுக்கு உதவுங்கள். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம். இரும்பு அகலில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி, கருங்குவளை மலரால் சனீஸ்வரரை அர்ச்சனை செய்யலாம். வன்னிமர இலைகளை மாலையாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமையன்று சாற்றலாம். சனி பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது நல்லது. சனியன்று விநாயகர், அனுமாரை வழிபட்டால் பிரச்னை தீரும்.