தேய்பிறை அஷ்டமி; யோக பைரவர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2024 10:02
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோக பைரவருக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மதியம் 12:00 மணிக்கு பைரவர் பூஜைகளை கணேஷ் மற்றும் பிரதோஷக்குருக்கள் செய்தனர். பின்னர் மூலவருக்கு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்புத் தீபாராதனையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.