பதிவு செய்த நாள்
03
பிப்
2024
10:02
சிதம்பரம்; சிதம்பரம் வேங்கான்தெரு, திருப்பாற்கடல் கீழக்கரை குபேர பைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிதம்பரம் வேங்கான்தெருவில் பர்ணாசாலை எனுமிடத்தில் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் கோயில் மற்றும் குருஞானசம்பந்தர் கோயில் உள்ளது. சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல, நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாகும். இதே வளாகத்தில் திருப்பாற்கடல் குளத்தின் கீழக்கரையில் அமைந்துள்ள குபேர பைரவர் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன 30-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 31-ம் தேதி மாலை முதல் காலயாகசாலை பூஜை, அஷ்டபந்தன பூஜை, வடுக பூஜை, பூர்ணாஹூதி மகாதீபாராதனை நடைபெற்றது. பிப்.1-ம் தேதி காலை இரண்டால் கால யாகசாலை பூஜை, கன்யா, மகாதீபாராதனையும் மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, தம்பதி, சுவாசினி பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. பிப்.2-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, குபேர பைரவர் கோயில் விமானத்தை அடைந்து நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் விமான கலசத்திற்கு காலை 9.40 மணிக்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை பைரவருக்கு அஷ்டமி மகாபிஷேகம் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு செங்குட்டுவன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சூரிய கண்ணன் சபாநாயகம், வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார், ஆதிமூலம், தொழிலதிபர் ராமநாதன். பாஜக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் கனகசபை, ஆசிரியர் அருணாசலம், சங்கர நடராஜ தீட்சிதர், டிரஸ்டி பசவராஜ், சமூக ஆர்வலர் சித்து என்கிற சிதம்பரநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.