சாத்தனூர் ருணவிமோசன சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2024 01:02
சாத்தனூரில் ருணவிமோசன சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தில் ஆனந்த கௌரி சமேத ருண விமோசன சித்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக போற்றப்படும் திருமந்திரம் அருளிய திருமூலர் அவதரித்த ஸ்தலமாக திகழ்கிறது. பிறவிக் கடன் நிவர்த்தி ஸ்தலமான இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 31ஆம் தேதி முதல் யாகசாலை பூஜையும் தொடங்கியது கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை பலம் வந்து விமான கலசங்களை அடைந்தன கோவில் அர்ச்சகர் பிரகாஷ் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலபிஷேகம் நடைபெறுகிறது.