Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பக்தர்கள் கூட்டம்; ... சனாதன தர்மம் காக்க திருப்பதியில் நடைபெற்று வந்த தர்ம மாநாடு நிறைவு சனாதன தர்மம் காக்க திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜைகள் துவங்கியது
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜைகள் துவங்கியது

பதிவு செய்த நாள்

04 பிப்
2024
11:02

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 48 நாட்கள் மண்டல பூஜைகள் துவங்கியது.அவிநாசியப்பர் பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மண்டல பூஜைகள் நடைபெற துவங்கியது. இதனையடுத்து, மூன்றாம் தேதி முதல் துவங்கிய மண்டல பூஜைகளில், நாள்தோறும் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தினம்தோறும் காலை 10 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஒரு கட்டளைதாரர் ரூ.20000 ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் செலுத்தி கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மண்டல பூஜைகள் முறைகள் குறித்து சிவாச்சாரியார் சிவக்குமார் குருக்கள் கூறும்போது; கும்பாபிஷேகம் நடைபெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மூன்றாம் தேதியிலிருந்து முதல் 12 நாட்களுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். தற்போது, பக்தர்கள் கூட்டம் காரணமாக அர்ச்சனைகள் எதுவும் செய்யாமல் தீபாராதனைகள் மட்டும் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக பணிகள், அதன் பின்னர் ஒரு வார காலமாக யாகசாலை பூஜைகளில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டது என தொடர்ந்து பணிகளில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு கோவில் நடை திறக்கப்படும் கால நேரம் மற்றும் பூஜைகள் முடிவு செய்யப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar