பதிவு செய்த நாள்
05
பிப்
2024
10:02
திருப்பதி; சனாதன தர்மம் காக்க திருமலை திருப்பதியில் மாபெரும் இந்து சமய சனாதன தர்ம மாநாடு நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்று வந்த மாநாடு இன்று நிறைவு பெருகிறது.
திருப்பதி; திருமலை திருப்பதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக மாநாடு 3ம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் நிறைவு நாளான இன்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறியதாவது; மாநாடு நடைபெற்று வரும் ஆஸ்தானமண்டப வளாகத்தில் இரண்டு நாட்களாக மகான்களின் ஆசியும், அமிர்தத் துளிகளும் தர்ம மழையாகப் பொழிவதை உணரமுடிகிறது. ராமானுஜாச்சாரியார், பூபிரட்டி, திருமலை நம்பி, அனந்தாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், சாமவை, ராணி பராந்தகாதேவி, வீர நரசிங்கதேவ ராயுலா, சந்திரசேகர் ஸ்வாமி, பிரபுபாதர் போன்றோரின் திருநாமங்களைச் சொல்லி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மனநிறைவு தருகிறது. தொடர்து மக்களிடையே இந்து தர்மத்தை எடத்து செல்லும் பணியாட்களாக செயல்படுவோம் என்றார். மூன்று நாள் மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.