காரமடை அரங்கநாதர் கோவில் தேர்நிலை சுவரில் சுவாமிகளின் ஓவியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2024 01:02
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேர்நிலை சுவரையொட்டி குப்பைகள் வீசப்படாமல் இருக்க தெய்வங்களின் படங்கள் ஓவியமாக வரையப்பட்டன.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாக அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு எதிரில் தேர்நிலை உள்ளது. காரமடை நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு பகுதியான மகாத்மா காந்தி சாலை செல்லும் வழியில் தேர்நிலையை ஒட்டியுள்ள சுவர் அருகே பக்தர்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் கோவில் அருகில் சுகாதாரமற்ற நிலை உருவானது. இதனிடையே இந்த வார்டு பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் குப்பைகளை சுத்தம் செய்ய மற்றும் சுவரில் அனுமன், அரங்கநாதர், தேர் படங்களை ஓவியம் வரைய ஏற்பாடு செய்தார். சுவரில் தெய்வங்களின் ஓவியம் வரையப்பட்டதால், அங்கு குப்பைகளை பக்தர்கள் வீசமாட்டார்கள் என நம்பப்படுகிறது.