அயோத்தி ராமர் கோவிலில் அருணாச்சல பிரதேச முதல்வர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2024 12:02
அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. இதன்பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, அமைச்சர்களுடன் அயோத்தி ராமர் கோவிலில் வழிபாடு செய்தார்.
ராம் லல்லாவை தரிசனம் செய்த பிறகு அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறுகையில்; "நாங்கள் இங்கு இருப்பது பாக்கியமா கருதுகிறோம். இது எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த நாளில், ராமருக்காக போராடி உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறோன் என்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.