பதிவு செய்த நாள்
07
பிப்
2024
05:02
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம், வருகிற, 18ம் தேதியும், தேரோட்டம், 24ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா வருகிற, 17ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 18ம் தேதி கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 22ம் தேதி காலை பெட்டத்தம்மன் அழைப்பும், 23ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது. 24ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.