அயோத்தி ; உத்தர பிரதேசம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடிகர் அமிதாப் பச்சன் தரிசனம் செய்தார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டா விழா ஜனவரி 22 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒரு மணி நேர சடங்குகளுக்குப் பிறகு பிரான் பிரதிஷ்டா விழாவில் ராம் லல்லா சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வந்த அமிதாப் பச்சன் ராம் லல்லாவை தரிசனம் செய்தார். அவர் வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்து கோயிலில் இருந்து வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன் அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு 10,000 சதுர அடி நிலத்தை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.