பதிவு செய்த நாள்
09
பிப்
2024
01:02
பிதுர்க்கடன் புண்ணியமானது. முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
இதேபோல், கன்னியாகுமரியில் தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடகடலோரத்தில் குவிந்தனர்.
உத்தரகாண்ட்: அமாவாசையை முன்னிட்டு, ஹரித்வாரில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்து, கங்கையில் புனித நீராடினர்.
அயோத்தியில் உள்ள சரயு காட் பகுதியில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து புனித நீராடினர்.
அமாவாசையை முன்னிட்டு காலை முதல் வாரணாசியில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்து, புனித நீராடினர்.
பிரயாக்ராஜ் சங்கம் காட் பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு திதி, தெர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர்.