திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிதிருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் கோலாகலமாக துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மண்டகப்படி குழுவினர்களால் அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்காரம், சிறப்பு பூஜை, செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூ அலங்கார அம்மனை தரிசனம் செய்தனர். இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று நடக்கும் பூச்சொரிதல் விழாவில் காலை 9:00 மணிக்கு அலங்கார ரத ஊர்தியில் அம்மன் பல்வேறு வீதிகள் வழியாக கோயிலை வந்தடைகிறார். பிப்.11ல் இரவு 8:00 மணிக்கு சாட்டுதல், பிப்.13ல் மதியம் 12:00 மணிக்கு கொடியேற்றம், பிப்.24ல் இரவு 10:00 மணிக்கு தசாவதாரம், மஞ்சள் நீராட்டு, பிப்.25ல் கொடியிறக்கம், பிப்.6ல் இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், பிப்.27ல் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.