அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; இலங்கை எம்.பி., உட்பட லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2024 11:02
அயோத்தி : ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்து மிகப்பெரிய ஆன்மிக தலமாக உருவெடுத்துள்ளது அயோத்தி. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர்.
உத்தர பிரேதசத்தின் அயோத்தியில் ஜன.22ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின் நாடு முழுதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருகை தருகின்றனர். இதனால் மிகப் பெரிய ஆன்மிக தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் முழு வீச்சில் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். இலங்கை எம்.பி., உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தரிசனம் செய்து திரும்பிய இலங்கை எம்.பி., நாமல் ராஜபக்சே கூறுகையில்; "நாங்கள் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், ராமர் கோவிலில் இருந்து ஆசிர்வாதம் பெறுவதில் பெருமை அடைகிறோம், குறிப்பாக ராமாயணப் பாதையுடன் தொடர்புடைய இலங்கையர் பௌத்த கலாச்சார பின்னணியில் வளர்ந்தவர், இந்து சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சி. இன்று இங்கு இருப்பது எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு பெரிய கௌரவம் என்று கூறினார்.