திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் விபீஷணன் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2024 11:02
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் தை அமாவாயை முன்னிட்டு நேற்று விபீஷணன் சேவை நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று ஏக உத்ஸவமாக விபீஷணனுக்கு பெருமாள் காட்சி அளித்தார். காலை 9:00 மணி அளவில், ஏக உத்ஸவமாக பெருமாள் அலங்காரத்தில் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கைத்தல சேவை நடந்தது. தொடர்ந்து தெற்கு நோக்கி எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு விபீஷ்ணருக்கு காட்சி அளித்து, பெருமாள் தென்னைமரத்து வீதி புறப்பாடு நடந்தது.