கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2024 04:02
கமுதி; கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அப்போது மூலவரான முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது.கோயிலின் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்புபூஜை நடந்தது. இதில் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் .பின்பு மார்ச் 15 தேதி கொடியேற்றம்,காப்புகட்டுதல், மார்ச்.26 தேதி பொங்கல் விழா, மார்ச்.27 அக்கினி சட்டி, பால்குடம்,பூக்குழி இறங்குதல்,சேத்தாண்டி வேடம், மார்ச்.28 தேதி திருவிளக்கு பூஜை,மார்ச்.30 தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிம்ம வாகன அலங்காரம் சிறப்புபூஜைகள் வீதி உலா நடைபெறும்.