பதிவு செய்த நாள்
15
பிப்
2024
01:02
கூடலூர்; நடுகடலூர் விநாயகர் கோவில், மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
நடுகடலூர் அருள்மிகு விநாயகர் கோவில், மேல்கூடலூர் அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு தீர்த்தம் எடுத்துவருதல், மதியம் முளைப்பாரி, தீர்த்தக்குடங்கள் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணி முதல், தொடர்ச்சியாக யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தது.இன்று காலை 5:30 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரா பூஜை, நாபீசந்தானம், ஸ்பர்சாகுதி, நான்காம் கால யாகபூஜைகள், மகாபூர்ணாகுதி, யாத்ராதான சங்கலியம் நடந்து. தொடர்ந்து, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், காலை 8:00 மணிக்கு நடுகூடலூர் அருள்மிகு விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் மேல்கூடலூர் அருள்மிகு சந்தை கடை மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.