பதிவு செய்த நாள்
26
அக்
2012
11:10
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில், பூச்சாட்டுதலுடன், திருவிழா துவங்கியது. திருச்செங்கோடு அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஐப்பசியில், பண்டிகை துவங்கும். இந்தாண்டுக்கான கோவில் திருவிழா, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், பூச்சாட்டுதலுடன் துவங்கியுள்ளது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்க உள்ளது. அதையடுத்து, நவம்பர், 2ம் தேதி, பொங்கல் விழாவும், 3ம் தேதி கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது.விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸார் செய்து வருகின்றனர்.