கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம் காலை 7-30 மணிக்கு மஹன் யாச ஜெபம், ருத்ர ஆவாஹனம் நடந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ரா அபிஷேகமும், தொடர்ந்து ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை, கலசாபிஷேகம், கோ பூஜையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் வேத பண்டிதர்களும் கலந்து கொண்டனர்.