பதிவு செய்த நாள்
21
பிப்
2024
11:02
பாலக்காடு; கேரள, பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவம் நேற்று நிறைவடைந்தது.
கர்நாடக இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கப்பட்ட சங்கீத உற்சவத்தை, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உஞ்சவததையொட்டி உள்ள மூன்று நான் சங்கீத உற்சவத்தில், இசை கலைஞர்களின் கச்சேரி நடந்தது. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9.15 மணிக்கு, தியாகராஜ ஸ்வாமிகளின் யாசகத்தை நினைவூட்டும் ஊஞ்சவிருத்தி பஜனை ராமச்சந்திரனின் தலைமையில் நடந்தது. அதன் பின் மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி, வெள்ளிநேழி சுப்ரமணியன், பாபுராஜ், விஸ்வநாதன், பிரியதர்சன் ஆகியோர் தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுதல் நடந்தது. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தது. மாலை 6.00க்கு சென்னை ராமநாதன் குழுவின் சாக்ஸபோன் கச்சேரி நடந்தது. அவருக்கு கொல்லம் ஸ்ரீஜித் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து பாதிரியார் போள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம் கச்சேரிகள் நடைபெற்றன. கோவிலில் இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.