திருப்பரங்குன்றம் கம்ப காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 04:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கம்ப காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல்கால யாகசால பூஜை யும், நேற்று காலை இரண்டாம் கால பூஜை பூர்த்தி செய்யப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் கம்பகாமாட்சி அம்மன், பெரிய கருப்புச்சாமி, சின்ன கருப்புச்சாமி, சங்கிலி கருப்புச்சாமி, வெள்ளாலச்சி, காக்குடையான், பலியன், பலிச்சி, சப்த கன்னிமார்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிவஸ்ரீ முத்துகிருஷ்ண சர்மா தலைமையில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.