தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தர்மசம்வர்த்தினி சமேத ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இக்கோவிலில் கடந்த 1937ம் ஆண்டு, 1971ம் ஆண்டு 25 மகா குரு சன்னிதானம் மற்றும் 26வது குருமா சன்னிதானம் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு நேற்று காலை, தருமபுர ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருப்பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பரிவார விமானங்கள் ராஜகோபுரம் முதல் கால யாக சாலை பூஜை பூர்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜையில் ம பூர்ணாஹூதி மகா தீபாரதனை நடைபெற்றது. பிறகு கடம் புறப்பாடாகிகோவில் உட்பிரகாரங்கள் மேலதாளம் முழங்க உலா வந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வர்ணனை படத்திற்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.