தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 05:02
திருப்பூர்; தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாசி மாதம் இரண்டாவது புதன் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.