தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 10வது நாளான நேற்று தேரோட்ட நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 8ம் திருநாளில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் நாளான இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை 24ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.