வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மாசி சதுர்த்தி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2024 10:02
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இதில் மாசி சதுர்த்தி சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 8:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாஆவன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.