திருக்கோஷ்டியூரில் வெண்ணெய்தாழி சேவை ; நாளை மாசித் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2024 12:02
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் இன்று வெண்ணெய்தாழி சேவை அலங்காரத்தில் பெருமாள் தெப்பமண்டபம் எழுந்தருளினார். மாசித் தெப்பம் நாளை நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு மாசித் தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பிப்.23 காலையில் 8:00 மணிக்கு வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும், காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நாளை பிப்.24 ல் காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.