திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2024 12:02
மயிலாடுதுறை; திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் மாசிமக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல்பெற்ற இந்த கோயிலில் சிவபெருமான், கல்யாண சுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 9-ஆம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் மகா பூரணாஹூதி செய்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் பள்ளத்தில் கோவிலை வலம் வந்து திருத்தேரில் எழுந்தருளினர். மகா தீபாராதனை செய்யப்பட்டு கோயில் செயல்அலுவலர் விமலா மற்றும் பொதுமக்கள் தேங்காய் உடைக்க தேரோட்டம் நடைபெற்றது. . நான்கு ரத வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். நாளை முக்கிய விழாவாக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.