தமிழ் மாதங்களில் மாசியை `கடலாடும் மாதம், தீர்த்தமாடும் மாதம்’ என்று சொல்வர். கும்ப ராசியில் சூரியனும், சிம்ம ராசியில் சந்திரனும் சஞ்சாரம் செய்யும் மாசிமக நாளில் பவுர்ணமியும் இருக்கும். இந்நாளில் காலையில் எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடி, சிவசிந்தனையுடன் கோயில் வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம், ராமேஸ்வரம், திருச்செந்துார் போன்ற தலங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் ‘கும்பமேளா’ என்ற பெயரில் இந்த விழாவைக் கொண்டாடுவர். சிறுவர் முதல் பெரியவர் வரை மாசி மகத்தன்று விரதம் இருந்து, குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டால் பாவம் பறந்தோடும். திருமணத்தடை, மகப்பேறின்மை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.