பதிவு செய்த நாள்
15
பிப்
2026
08:02
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று மீண்டும் நாட்டியஞ்சலி விழா துவங்கியது. ஏராளமான நாட்டிய மாணவிகள் பங்கேற்று நடன அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1981 முதல் 2014 வரை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், நாட்டியாஞ்சலி விழா, தொடர்ந்து 33 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வகிக்கலாம் என நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, கடந்த 2015 ம் ஆண்டு முதல், பொது தீட்சர்கள் சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவதாக அறிவித்து, தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழாவை துவங்கி நடத்தினர். இதன் காரணமாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நாட்டியாஞ்சலி விழா, தெற்கு வீதியில் மாற்றப்பட்டு, தொடர்ந்து 45 ம் ஆண்டாக, கடந்த 13 ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ஆனால் தீட்சிதர்கள் சார்பில் நடத்தப்பட்ட நாட்டியாஞ்சலி விழா 3 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு, மீண்டும் நடராஜர் கோவிலில், நாட்டியாஞ்சலி விழா, பொது துவங்கியுள்ளது. நேற்று துவங்கிய விழா வரும் 26 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டிய மாணவிகள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்தினர். அதில் மும்பை சௌந்தர்யா நாட்டிய களாலயா பவுண்டேஷன் மாணவிகள் பரதத்துடன் விழா துவங்கினர். தொடர்ந்து சேலம் லாவண்யா, ஆஸ்திரேலியா தில்லை நாட்டியாலயா, கடலூர் சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பாரதம், சிதம்பரம் வர்ஷினி ராஜ மன்னன் பரதம் , சென்னை நிஷ்ரேயா வரலட்சுமி, ஜெய கிருஷ்ணா ஆர்ட்ஸ் பள்ளி மாணவிகள் பரதம் என மாணவர்கள் பல்வேறு நாட்டியங்கள் அறங்கேற்றன