மஹாசிவராத்திரி விழா; சிவன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2026 08:02
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் விஜயராணி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.