Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஹா ... சேந்தமங்கலம் சிவன் கோவிலில் சிவராத்திரி மகோத்சவம் கோலாகலம் சேந்தமங்கலம் சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரி; குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சிவராத்திரி; குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
08:02

நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நேற்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 12 பழங்கால சிவாலயங்கள் அமைந்துள்ளது. திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருந்திக்கரை, பொன்மனை, திருவிடைக்கோடு, கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாளம் ஆகிய இடங்களில் இந்த கோயில்கள் அமைந்துள்ளது.

சிவராத்திரி நாளில் பக்தர்கள் ஓடிச் சென்றும், வாகனங்களில் சென்றும் பக்தர்கள் வழிபடுவது இதன் சிறப்பாகும். இதற்கு ஒரு வரலாற்று பின்னணி உள்ளது.புருஷா மிருகம் என்பது பாதி மனித உருவம், பாதி புலி உருவம் அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவ பக்தர். சிவனை தவிர வேறு எந்த இறைவனையும் ஏற்க மாட்டார். விஷ்ணு நாமம் இவருக்கு பிடிக்காது. தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக பகவான் கிருஷ்ணன் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமனை அழைத்து, குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற நடத்தப்படும் யாகத்திற்கு புருஷா மிருகத்தின் பால் தேவைப்படுவதால் அதை பெற்று வரும்படி பீமனை அனுப்பி வைத்தார்.

கூடவே 12 ருத்ராட்சங்களை வழங்கி கோபாலா கோவிந்தா என்று அழைத்தபடி புருஷா மிருகத்தை நெருங்குமாறு கூறிய கிருஷ்ண பகவான், என் பெயரை கேட்க விரும்பாத புருஷா மிருகம் உன் மீது பாயும், நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டு விடு அது சிவலிங்கமாக மாறியதும் அதற்கு புருஷா மிருகம் பூஜைகள் செய்ய தொடங்கிவிடும். அங்கிருந்து நீ ஓடிவிடு. இப்படி ஒவ்வொரு இடமாக துரத்தி வரும்போது ருத்ராட்சத்தை போடும்படி கூறினார். 12 வது இடத்தில் ருத்ராட்சம் விழும்போது நானும் பரமேஸ்வரனும் இணைந்து காட்சி தருவோம் என்று விளக்கி பீமனை அனுப்பி வைக்கிறார்.

முதல் ருத்ராட்சம் முஞ்சிறை அருகே திருமலையில் விழுந்தது. கடைசி ருத்ராட்சம் திருநட்டாலத்தில் விழுந்தது. அங்கு ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து சிவனும் விஷ்ணு ஒன்று என்பதை புருஷா மிருகத்துக்கு உணர்த்தினார். அதைத்தொடர்ந்த யாகத்துக்கு பால் வழங்க புருஷாமிருகம் சம்மதித்தது. இந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடக்கிறது. ஓடுகின்ற பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்றுப்பையும் கொண்டு கோபாலா கோவிந்தா என்று கோஷமிட்டபடி ஓடுகின்றனர். நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய இந்த ஓட்டம் நேற்று இரவு திருநட்டாலத்தில் நிறைவு பெற்றது. வாகனங்களில் செல்பவர்கள் நேற்று அதிகாலை முஞ்சிறையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்குவார்கள். இதையொட்டி இந்தக் கோயில் அமைந்துள்ள பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் , போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar