மாசி செவ்வாய்; கருமாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2024 10:02
கோவை; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதியில் இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.