வராகி அம்மன் சிலை பால் குடிக்கும் அதிசயம்; மெய்சிலிர்த்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 11:02
மானாமதுரை; மானாமதுரை சீரடி சாய்பாபா கோவிலில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் செய்யப்பட்ட வராகி அம்மன் சிலை பால் குடிக்கும் அதிசயத்தை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்து போகினர்.
மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் உள்ள பாபா மெட்ரிக் மற்றும் பிரைமரி நர்சரி பள்ளி வளாகத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது.இக் கோவிலில் தினம்தோறும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவில் வளாகத்தில் புதிதாக வராகி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் சிலர் பால் ஊட்டியதையும் அம்மன் பால் குடித்ததையும் பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பரவசத்தோடு கோவிலுக்கு வந்தவர்கள் அம்மன் சிலை பால் குடிப்பதை பார்த்து மெய் சிலிர்த்து போகினர். இதுகுறித்து இக்கோயிலை நிர்வகித்து வரும் பாபா மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, பவுர்ணமியன்று புதிதாக வராதி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்த பின்னர் பக்தர்கள் சிலர் அம்மனுக்கு ஒரு கரண்டியில் பால் ஊட்டினர். அதனை அம்மன் சிலை சில வினாடிகளில் உறிஞ்சி குடித்ததை பார்த்து மெய்சிலிர்த்து போகினர், அதனைத் தொடர்ந்து மீண்டும் பால் ஊட்டிய போதும் அம்மன் பால் குடித்ததை ஏராளமானோர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருவதாக கூறினர்.