வடமதுரை; வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது. பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஏழு வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.