வடமதுரை; வடமதுரையில் கள்ளியடி குருநாதருக்கு ஊர் மக்கள் ஊர் பூஜை விழா நடத்தினர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. சிறுவயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் வடமதுரை, கா.புதுப்பட்டி என இரு இடங்களிலும் தங்கி நற்பணிகள் செய்தார். கள்ளிமரத்தடியில் தங்கியிருந்ததால் கள்ளியடி குருநாதர் என வடமதுரை மக்கள் அழைத்தனர். கா.புதுப்பட்டியில் 1941ல் ஜீவசமாதி அடைந்த இவரது நினைவாக மாசி விசாக நட்சத்திர நாளான நேற்று வடமதுரை மேற்குரத வீதியில் இருக்கும் கள்ளியடி குருநாதர் மடத்தில் 42வது குரு பூஜை விழா நடந்தது. சித்திமுக்தி விநாயகர் கோயிலில் அபிஷேக, ஆராதனை வழிபாடு நடத்திய பின்னர், 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமக்க, அலங்கார ரத ஊர்வலம் நகரை வலம் வந்தது. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.