பதிவு செய்த நாள்
04
மார்
2024
01:03
அன்னூர்; குமாரபாளையத்தில், ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பளித்து வழிபாடு செய்தனர்.
கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில், உள்ள ஈஷா யோக மையத்தில் வருகிற, 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி குறித்தும், தியானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆதியோகி சிலை தாங்கிய ரதம் வருகை புரிகிறது. ஈரோடு மாவட்டத்திலிருந்து, நேற்று முன்தினம் அன்னூருக்கு ஆதியோகி ரதமும், 63 நாயன்மார்கள் வீற்றிருக்கும் வாகனமும் வருகை புரிந்தன. பசூரில், தன்னார்வலர்கள் ரதத்திற்கு பூ தூவி தண்ணீர் ஊற்றி வரவேற்பளித்தனர். பசூர், அ. மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ரதத்துடன் 29 பேர் பாதயாத்திரை ஆக வந்திருந்தனர். குமாரபாளையத்தில் 63 நாயன்மார்கள் வாகனங்களில் இருந்து தனியாக எடுத்து வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், கடந்த பிப். 7ம் தேதி, சென்னை, கூடுவாஞ்சேரியில், பாதயாத்திரை ஆக புறப்பட்டு 14 மாவட்டங்களில் கடந்து உள்ளோம். வருகிற 6ம் தேதி இரவு ஈஷா யோக மையத்தை அடைய உள்ளோம், என்றனர்.