திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் மார்ச் 15ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2024 01:03
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வரும் 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்ககிறது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமான புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள், இந்தாண்டு திருவிழா வரும் 15ம்தேதி வெள்ளிகிழமை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ம்தேதிவெள்ளிகிழமை காலை ஒன்பது மணிக்கு திருக்கல்யாணமும், 23ம் தேதி சனிகிழமை காலை எட்டு மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.