Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 மார்
2024
10:03

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நேற்று 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைத்தார்.

முன்னதாக, ஈஷா மையத்துக்கு வருகை தந்த துணை ஜனாதிபதியை, சத்குரு வரவேற்றார். ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்ய குண்டத்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தன் மனைவி சுதேஷ் உடன், தீபமேற்றி வழிபட்டார். அதன்பின், நந்திக்கு மாலை அணிவித்து வழிபட்டார். தியானலிங்கத்தில், சத்குரு நிகழ்த்திய பஞ்சபூத கிரியாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்த ஆதியோகி சிலையின் முன் வந்தார். அங்குள்ள யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டு, மஹா யோகா யக்னா தீபத்தை ஏற்றி, மஹா சிவராத்திரி விழாவை துவக்கி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.

இவ்விழாவில், தமிழக கவர்னர் ரவி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா கவர்னர் இந்திரசேனா ரெட்டி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில், “இது, 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா. 1994ம் ஆண்டு, 70 பேர் மட்டும் இருந்தோம். ஒரு பெண்மணி மட்டும் இருந்தார். அவரை சென்னை பாட்டி என்று அழைத்தோம். அவர், இரவு முழுவதும், இரண்டே பாடல்களை பாடிக்கொண்டிருப்பார். அவரது பக்தி மெய்சிலிர்க்க வைக்கும். கடந்தாண்டு, ஈஷா மஹா சிவராத்திரி விழாவில், நேரிலும், சமூக வலைதளம், டி.வி., வாயிலாகவும் என, 145 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு, உலகம் முழுவதும், 200 மில்லியன் மக்கள் கலந்து கொண்டிருப்பார்கள்,” என்றார். அதன் தொடர்ச்சியாக, சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள் மற்றும் தமிழக, கர்நாடக, வடமாநில இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பல்வேறு கோயில்களில் நடந்த சிவராத்திரி விழா கொண்டாட்டம் லைவ் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://www.dinamalar.com/maha-shivratri-2024/

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar