குப்பிச்சிபாளையம் பால தண்டாயுதபாணி கோவிலில் சண்முக திரிசதி அர்ச்சனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 03:03
கோவை; பெரியநாயக்கன் பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் சண்முக திரிசதி அர்ச்சனை, இன்று மாசி கடைசி செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் திருமணத்தடை மற்றும் உடல் நலம், கணவன் மனைவி ஒற்றுமை ஆகியவற்றுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.