பரமக்குடி அங்காளம்மன், வாணிக் கருப்பணசாமி கோயில் பால்குட விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 03:03
பரமக்குடி; பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணிக் கருப்பணசாமி கோயில் 24 ஆம் ஆண்டு பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி, பாரிவேட்டை விழா மார்ச் 6 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 8 சிவராத்திரி விழாவையொட்டி பொங்கல் வைத்து இரவு முழுவதும் குடிமக்கள் வழிபாடு நடத்தினர். மார்ச் 10 அன்று பாரிவேட்டை விழா மற்றும் அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் 9:30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரிய பஜார் வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தனர். சக்தி கோஷம் முழங்க அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. அன்னதானத்தை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்புராயலு துவக்கி வைத்தார். பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.