கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் செந்நிற ஆடை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.