தாய்லாந்தில் இருந்து இன்று இந்தியா திரும்புகிறது புத்தரின் நினைவு சின்னங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 12:03
தாய்லாந்து; இந்தியா தனது வசம் உள்ள புத்தரின் சில நினைவுச்சின்னங்களை பிப்ரவரி 22 முதல் மார்ச் 18 வரை தாய்லாந்தில் காட்சிப்படுத்தியது. முதலில் இந்த நினைவுச்சின்னங்கள் பாங்காக்கில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. பின்னர் தாய்லாந்து முழுவதும் ஐந்து வெவ்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் புத்தர் மற்றும் அவரது இரண்டு முக்கிய சீடர்களான அரஹந்த் சாரிபுத்தர் மற்றும் மஹா மொகல்லானா ஆகியோரின் நினைவுச்சின்னங்களும் உள்ளன. இதை தாய்லாந்தில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் தங்கள் முறைபடி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று 19ம்தேதி முழு அரசு மரியாதையுடன் இந்த நினைவுச்சின்னங்கள் இந்தியா திரும்புகின்றன.