பதிவு செய்த நாள்
19
மார்
2024
12:03
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாதர் (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண விழா, யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கின.
கடையநல்லுார் கரியமாணிக்கப்பெருமாள் என்ற நீலமணிநாதர் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாளை (20ம் தேதி) மஹா ஸம்ப்ரோஷணம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9 மணிமுதல் 12.30மணிவரை அனுக்ஞை, புண்ணியாகவாசனம், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை யஜமானர் அழைப்பு, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. இன்று (19ம் தேதி) காலை 8 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை புண்யாகவாசனம், மூர்த்தி ஆவாஹணம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடக்கின்றன. நாளை (20ம் தேதி) காலை 6 மணிமுதல் 9 மணி வரை புண்யாகவாசனம், நித்ய திருவாதாரனம், நித்யஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. 9.36மணி முதல் 10.53 மணிக்குள், விமான ராஜகோபுரம் மகா ஸம்ப்ரோஷணம் நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விசேஷ திருவாராதானம், மகதாசிர்வாதம், ப்ரம்மகோஷம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம், 9 மணிக்கு பெருமாள் கருடசேவை நடக்கிறது. ஏற்பாடுகளை கடையநல்லுார் கிராம மகாஜனங்கள் செய்துவருகின்றனர்.